கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர்… முன்னாள் எம்.பி.யின் கருத்து தவறானது… கோவை கமிஷனர் கருத்து!!

கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

former MPs statement regarding the suspect in front of kottai eswaran temple is wrong says coimbatore police commissioner

கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சந்தேக நபர் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சார்பில் பாதசாரிகளுக்காக காந்திபுரம் சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிக்னலை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் போக்குவரத்தை சரி செய்ய சாலையை கடக்க கூடிய பாதசாரிகளுக்கு தனிநேரம் ஒதுக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் சிக்னலில் இது போன்று வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட்டிக்கப்பட்ட பயிர்காப்பீடு செய்யும் காலக்கெடு... 33,258 விவசாயிகள் பயீர்க்காப்பீடு செய்துள்ளதாக தகவல்!!

தற்போது காந்திபுரம் சிக்னலில் பாதசாரிகள் கடக்க சிக்னல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலையை கடக்க கூடிய பொதுமக்கள் அச்சமின்றி வசதியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு ஏற்ப தற்போது இரண்டாவது சிக்னல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சிக்னல்களிலும் அமைக்கப்பட உள்ளது. இந்த சிக்னல் மூலம் திருவிழா நேரங்களில் பயனாக இருக்கும். கோவையின் எல்லை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து டைனமிக் வெய்கில் செக்கிங் நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் வாகனங்களை தணிக்கை செய்கிறோம்.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்… தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!!

அதிமுக முன்னாள் எம்பி எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறான தகவல். அவரது பேட்டியை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஷாரிக் பயன்படுத்திய வாட்ஸ்அப் எண்ணில் கோவையின் ஆதி யோகி சிலையின் புகைப்படத்தை DP ஆக வைத்திருந்ததாக புகைப்படம் தகவல் வெளியாகியகியுள்ளது அதுபற்றி விசாரணை ஏதும் நடைபெறுகிறாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு தற்போது வரை இது போன்ற தகவல்கள் ஏதும் வரவில்லை. வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios