கோவையில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

food safety officers inspect panipoori shops in coimbatore vel

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல் படி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 10 குழுக்கள் பிரிக்கப்பட்டு கோவை மாநகரில் காந்திபுரம், வ உ சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு மற்றும் சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம் சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மற்றும் மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன் பாளையம் போன்ற பல பகுதிகளிலும் பானி பூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கும் இடங்கள் துரித உணவு விற்பனை செய்யும் தள்ளு வண்டிகள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆய்வின் போது 73 கடைகளை ஆய்வு செய்ததில், 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 4 உணவு மாதிரிகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகம் படுத்தியதற்காக 6 கடைகளுக்கு ரூ.12000  அபராதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பானி பூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் நான்கு தயாரிப்பு இடங்களில் அதிக கலர் சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பானி பூரி மசாலா 57 கிலோ தரமற்ற உருளைக் கிழங்கு, காளான் 5 கிலோ மற்றும் 19 கிலோ உருளைக் கிழங்கு மசாலா, செய்தி தாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறம் சேர்க்கப்பட்ட  சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி

இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் ஆகும். அதில் நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப் பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர், மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios