கர்நாடகாவில் நடந்தது.. வட மாநிலங்களிலும் நடக்கும் - கர்நாடக தேர்தல் குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்து

கர்நாடகாவில்  ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.

Following Karnataka, BJP's defeat will continue in other states says minister MP Saminathan

கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரசு துறை சார்ந்த அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

Following Karnataka, BJP's defeat will continue in other states says minister MP Saminathan

அப்போது விழாவில் பேசிய அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், “முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான். அதை காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தனர்.

மற்ற மாநிலங்களுக்கும் வழி காட்டும் அரசாக திமுக அரசு  உள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் நாளில் கொரோனா நிதி உதவி, மகளிருக்கு பேருந்து பயணம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல் கையெழுத்தாக போட்டார் முதல்வர். கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தவர் முதல்வர் என்று கூறினார்.

இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?

Following Karnataka, BJP's defeat will continue in other states says minister MP Saminathan

தொடர்ந்து பேசிய அவர், கடந்த திமுக ஆட்சி காலத்தில் அவினாசி சாலை,பெரியநாய்கன்பாளையம் உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்ட காந்திபுரம் மேம்பாலம் அதிமுக ஆட்சியில் குறைபாடுடன் கட்டப்பட்டது” என்று கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுகவின் திட்டங்கள் தான் கர்நாடக தேர்தலில் எதிரொலித்தது.

பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் அழுத்தமாக திட்டங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகும். வட மாநிலங்களிலும் இந்த விழிப்புணர்வு அடுத்தடுத்து ஏற்படும். பாஜக மதரீதியான மூளை சலவையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து கர்நாடக மக்கள் மத்தியில் தெளிவு ஏற்ப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் தொடரும்” என்று கூறினார்.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios