கோவை நொய்யல் ஆற்றில் பல அடி உயரத்திற்கு பொங்கி எழும் நுரை

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் பல அடி உயரத்திற்கு நுரை பொங்கி எழுவதால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.
 

Foam rising several feet high in the Noyyal river in Coimbatore

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் வழித்தடம் உள்ளது. இந்த பகுதியில் அணைக்கட்டு ஒன்றும் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வளம் செழித்து காணப்பட்ட இந்த நொய்யல் ஆறு தற்போது தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் உள்ளிட்டவை கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு முழுவதும் நிரம்பி அதிக அளவில் தண்ணீர் ஓடிய நிலையில்  தற்போது நீர் வரத்து குறைந்து மீண்டும் சாக்கடை தண்ணீர் ஓடி வருகிறது. இதனால் தென்னந்தோப்புகளை ஒட்டி ஆறு ஓடும் பகுதியில் பல அடி உயரத்திற்கு நுரை பொங்கி எழுகிறது. 

மத்திய சிறை முன்பு கூட்டம் கூட்டிய கோவை பாஜக தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

இது தென்னந்தோப்புகளுக்குள் பறந்து செல்வதாகவும், நுரை பொங்குவதால் மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நுரை மனித உடலில் படும்போது அலர்ஜி, அரிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாற்றுகின்றனர். அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios