மீன்பிடி தடைக்காலம் : மீன் விலை கிடு கிடு உயர்வு! மீன்கள் வரத்து 50 சதவீதத்திற்கும் வீழ்ச்சி!
மீன்பிடி தடைக்காலம் இருந்து வரும் நிலையில், சந்தைக்கு மீன்கள் வரத்து பாதிக்குப் பாதி குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் இருந்த தடைக்காலம் 61 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது
கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்,
வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி முடிகிறது.மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள 3000க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்து வெகுவாக குறைந்துள்ளன. இதனால், மீன்களின் விலையும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
இது குறித்து கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதி மீன் வியாபாரிகள் கூறுகையில், இங்கு 50-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இருபதுக்கு மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தூத்துக்குடி ராமேஸ்வரம் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு கர்நாடகா மாநிலம் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 முதல் 60 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் 300 டன் வரை மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. நிலத்தகராறில் பழிக்கு பழி! ம.பியில் பயங்கரம் - வைரல் வீடியோ
தற்போது, மீன் பிடி தடைக்காலம் துவங்கியுள்ளதால் தூத்துக்குடி நாகப்பட்டினம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நாட்டுப் படைகள் சென்று மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து வரும் மீன்களில் அளவு குறைந்துள்ளது அதே சமயம் கேரளா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வருகிறது என்றனர்.