Asianet News TamilAsianet News Tamil

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. நிலத்தகராறில் பழிக்கு பழி! ம.பியில் பயங்கரம் - வைரல் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் 3 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2 Groups Clash In Madhya Pradesh's Morena 6 People Killed
Author
First Published May 5, 2023, 3:05 PM IST

3 பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனாவில் நிலத்தகராறு வன்முறையாக மாறியதை அடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில் பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

2 Groups Clash In Madhya Pradesh's Morena 6 People Killed

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 முதல் 60 கிமீ தொலைவில் உள்ள லெபா கிராமத்தில் தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு இடையே காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. 2013 ஆம் ஆண்டு கழிவுகளை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பங்களும் மோதிக்கொண்டன. அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறினர்.நீதிமன்றத்திற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்டனர். தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் அவர்கள் மீது தடிகளால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட ஆறு பேரில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அடங்குவர்.

இதையும் படிங்க..2 முறை கர்ப்பம்.. பேஸ்புக் காதல்! 23 வயது பெண்ணை சகோதரர் உடன் சீரழித்த போலீஸ்! அதிர்ச்சி சம்பவம்

2 Groups Clash In Madhya Pradesh's Morena 6 People Killed

கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, இரு குழுக்களுக்கும் பழைய பகை இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இன்றைய கொலையாளிகளின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios