பேருந்துகளில் சில்லறை பிரச்சினைக்கு முதல் முறையாக QR கோடு மூலம் தீர்வு கண்ட கோவை நடத்துநர்கள்
கோவையில் நடத்துநர்கள், பயணிகள் இடையேயான சில்லறை பிரச்சினையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் முதல் முறையாக தனியார் பேருந்துகளில் கியூ ஆர் கோடு மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படத்தப்பட்டுள்ளது.
கோவையில் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது தற்போது பொதுமக்கள் தங்கள் பேருந்துகளில் பயணிகளை வரவழைக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்தில் க்யூ.ஆர் கோடு அமைத்துள்ளனர் இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அவப்பொழுது பேருந்தில் பொதுமக்கள் மற்றும் நடத்துனர் இடையே சில்லறை பிரச்சினை அதிகமாக வருகிறது எனவும் இதனை தடுக்க பேருந்து உரிமையாளர்கள் இந்த க்யூ.ஆர் ("QR CODE") கோடு வசதியை பேருந்தில் அமைத்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த "க்யூ.ஆர் கோடு" மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிக் கொள்ளலாம் என்ற வசதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என தனியார் பேருந்து நடத்துனர்கள் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.