கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை; முதல் நாளிலேயே நிரம்பி வழிந்த விமானம்
கோவை - அபுதாபி இடையே இன்று நேரடி விமான சேவை தொடங்கிய நிலையில், முதல் பயணத்தில் 168 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் விளைவாக கோவை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
சிலை கடத்தல் கும்பலுடன் கூட்டு? ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை
அதன்படி இன்று தொடங்கிய முதல் விமான சேவையில் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் 163 பயணிகள் கோவைக்கு வந்தடைந்தனர். காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்த விமானம், 7.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணம் செய்தனர்.
ஆணவப்படுகொலை என்பது வன்முறை இல்ல; அக்கறை தான் சாமி - ரஞ்சித் விளக்கம்
இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை வாரத்திற்கு 3 நாட்கள் என்ற அடிப்படையில் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வளர்ந்து வரும் கோவை நகரில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கோவை கூடுதல் வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளனர்.