தீ அணைப்பான் உருளை வெடித்து விபத்து... இரண்டாக முறிந்த இளைஞரின் கால்!!
தீ அணைப்பான் சிலிண்டர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் மீது மோதியதில் மாணவரின் கால் இரண்டாக முறிந்தது.
தீ அணைப்பான் சிலிண்டர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் மீது மோதியதில் மாணவரின் கால் இரண்டாக முறிந்தது. சேலத்தை சேர்ந்த அருண் என்பவர் கோவை குணியமுத்தூர் தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குணியநுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிகள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை... ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்!!
அப்போது, சாலையின் வலது புறத்தில் குமார் என்பவரின் பழய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதில் அந்த தீ அணைப்பான் சிலிண்டர் இடது புறம் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்த கல்லூரி மாணவரின் காலில் பட்டு விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... கைதான இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!
இதில் மாணவரின் கால் இரண்டாக முறிந்தது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் மாணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.