இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறை!!
கோவையில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்த உலா வரும் காட்சி வெளியானதை அடுத்து மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்த உலா வரும் காட்சி வெளியானதை அடுத்து மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை நரசிபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை செதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜன.4 கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்... பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்!!
இரவு நேரங்களில் மட்டுமே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டம் காலையில் காட்டுக்குள் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை நரசிபுரம் பகுதியில் நான்கு காட்டு யானைகள் அந்தப் பகுதியில் நடமாடி வருவதாக கூறப்பட்டது. மேலும் யானைகள் ஊருக்குள் வலம் வரும் வீடியோ காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்ய முடியாது... வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!
மேலும் யானைகள் நடமாடுவதை கண்டால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டங்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் யானை ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.