கோவை மேற்கு மண்டலத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது… ஐ.ஜி. சுதாகர் தகவல்!!

கோவை மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை விட தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாக ஐ.ஜி. சுதாகர் தெரிவித்துள்ளார். 

Crime has decreased in West Zone of Coimbatore says ig sudhakar

கோவை மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை விட தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாக ஐ.ஜி. சுதாகர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கோவை சராக உயர் காவல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 27 டி.எஸ்.பிகளும் 8 ஏ.டி.எஸ்.பி.களும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. சுதாகர்,  கடந்த ஆண்டில் கோவை சரதத்தில் 142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 91 கொலைகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் ஆதாய கொலைகள் குறைந்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வழிப்பறி செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 78 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வந்து 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சராக பொறுப்பேற்றதும்... உதயநிதி ஸ்டாலின் செய்யப்போகும் முதல் வேலை இதுதானாம்! வெளியான தகவல்

அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்ற ஆண்டு 431 வழக்குகள் பதியப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதேபோன்று சென்ற ஆண்டு குண்டர் சட்டத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு 155 பேர் குண்டர் சட்டத்திலும் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகள் அதிகமாக நடைபெற்று இருக்கிறது. கோவை சரகத்தில் 1211 கிராமங்களில் கஞ்சா புழக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு ஓட்டு போட சொல்றேன்! போட மாட்டிக்கிறாங்க! நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?சரத்குமார் ஆதங்கம்

அவற்றிலிருந்து 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் 60% கஞ்சா ஒழிப்பு பணி நிறைவேறி உள்ளது. மேலும் மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பல்வேறு வகையில் காவல்துறையும் தன்னார்வ தொண்டு அமைப்பும் இணைந்து செய்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் தொண்டு நிறுவனம் சார்பாக காவலர்களுக்கு மெடிக்கல் கிட் வழங்கப்பட்டது. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு தினமும் அதை பரிசோதனை செய்து ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios