கோவையில் கார் வெடித்த விவகாரம்.. கைதான 5 பேருக்கும் நவ.8 வரை நீதிமன்றக் காவல்!!

கோவையில் கார் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

court custody for 5 person those who are arrested in covai car blast case

கோவையில் கார் வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ம் தேதி அதிகாலை 4 30 மணி அளவில்  காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்குகள்… திரும்பி அதே நாட்டிற்கு அனுப்பி வைத்த சுங்கத்துறை!!

இதுத்தொடர்பான வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் தற்போது உபா பிரிவு கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுசதி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3  பிரிவுகளும் முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலீடுகள் பெற்று மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனருக்கு ஜாமின் மறுப்பு!!

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும்  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள உள்ள  ஜே எம் 2 நீதிபதி செந்தில் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்கள் 5 பேருக்கும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 2 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டார். முன்னதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் கோவை அரசு மருத்துவமையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios