கொரோனா பற்றி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா. நம்முடைய மக்கள் தொகையை குறைக்கவே இவ்வாறு பரப்புகின்றனர். அரசாங்கம் தான் பள்ளி, வணிக வளாகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். இலுமினாட்டிகள்தான் நம் அமைச்சர்களுக்கு எதை செய்யவேண்டும் என்கிற தகவலை தருகின்றனர். 

மேலும், நோய் பாதிப்பு இல்லாதவர்களை கூட்டிச்சென்று ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர். இந்த வினாடியில் இருந்து அனைத்து அரசு அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் சொல்லும் விஷயத்தை செய்யக்கூடாது. நமக்கு நல்லது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். கொரோனாவுக்கு தான் மற்றுசிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் அதில் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க;- லலிதா ஜூவல்லரி உரிமையாளரிடம் நிலமோசடி... 1.75 கோடி ரூபாயை ஏமாற்றி ஏப்பம் விட்ட திமுக முக்கிய பிரமுகர்..!

இந்நிலையில், கொரோனா பற்றி வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இழிப்படுத்தும் வகையில் ஆடியோ வெளியிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஹீலர் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.