Asianet News TamilAsianet News Tamil

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 14வது நபர் அதிரடி கைது; புலனாய்வு அதிகாரிகள் பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 14வது நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

combatore car blast case 14th person arrested by nia officers vel
Author
First Published Nov 3, 2023, 4:46 PM IST | Last Updated Nov 3, 2023, 4:48 PM IST

கோயம்புத்தூர் உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. நள்ளிரவு நேரத்தில் குண்டு வெடித்ததால் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம்; விசாரணைக்கு பயந்து பொறியாளர் தற்கொலை

இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டதையடுத்து இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

போத்தனூர் திருமலை நகரைச் சேர்ந்த தாஹா நசீர் இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். தாஹா நசீர் கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கார் குண்டுவெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நசீரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரை புலனாய்வு அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios