Asianet News TamilAsianet News Tamil

சிறுவர் முதல் பெரியர் வரை: கோவையில் சிலம்பம் சுற்றி அசத்தல்!

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு கம்பு சுற்றி அசத்தினர்

Coimbatore national level silambam competition children to elderly people participated and showed their talent smp
Author
First Published Oct 15, 2023, 4:06 PM IST | Last Updated Oct 15, 2023, 4:05 PM IST

கோவையில் நடைபெற்ற  கலை சமர் எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கம்புகளை  கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கலை சமர் 2023 எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கோவையில் நடைபெற்றது. போட்டிகளை கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் துவக்கி வைத்தார்.

சிலம்பம் தலைமை பயிற்சியாளர் நந்தகுமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  பங்கேற்றனர்.

நான்கு வயது சிறுவர், சிறுமிகள் முதல் 60 வயதான  பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில் ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, நெடு கம்பு, வாள் வீச்சு  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

நடிகர் விஜய்க்கு திமுக பயப்படுகிறது: கடம்பூர் ராஜூ!

தமிழர் பாரம்பரிய  கலைகளை மீட்கும் விதமாக தொடர்ந்து இரண்டாவது சீசனாக நடைபெறும் இதில் சிறு குழந்தைகள் கம்புகளை அசத்தலாக சுற்றியது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios