இந்தி திணிப்பிற்கு எதிராக கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
இந்தி திணிப்பிற்கு எதிராக கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்பிற்கு எதிராக மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் அரசு கலைக் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தி திணிப்பிற்கு எதிராகவும், ஆளுநர் புள்ளி விவரங்கள் இன்றி பேசுவதாகவும், குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர் . இந்தி திணிப்பு என்பது தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பல்வேறு தீமைகளை விளைவிக்கும். எனவே, அரசியல் சட்டத்தின் படி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
தமிழ் மொழியை மீறி இந்தி திணிப்பை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் ..! ஸ்டாலின் தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு
இந்தி மொழியை மற்ற மாநிலங்கள் மீது திணிக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்கள் பாதிக்காத வண்ணமே மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது ஏற்புடையதல்ல எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
ஹிந்தி திணிப்பு.. போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்.. தூத்துக்குடியில் பரபரப்பு..