Asianet News TamilAsianet News Tamil

கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் சிறுவர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

coimbatore gets heavy rain today
Author
First Published May 29, 2023, 5:52 PM IST

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பகல் மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பகல் மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இன்று பிற்பகல் மூன்றரை மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சிறிய அளவிலான ஐஸ்கட்டிகள் வானில் இருந்து விழத் தொடங்கியது. இந்த ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். 

திருமணமான 2 மாதத்தில் 10 சவரன் நகைகளுடன் மணப்பெண் மாயம் - பெற்றோர் கண்ணீர்

குறிப்பாக சிறுவர்கள் ஐஸ் கட்டிகளை கைகளில் எடுத்து வைத்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து விளையாடி மகிழ்ந்தனர். கோவை இடையர்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு ஆலங்கட்டி மழை பொழிவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கனமழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் செடிகள் மற்றும் மரங்கள் காற்றில் ஆடிய காட்சி பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு டப்பா போனை அனுப்பி விபூதி அடித்த ஆன்லைன் நிறுவனம்

Follow Us:
Download App:
  • android
  • ios