Asianet News TamilAsianet News Tamil

ஜமேசா முபீன் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத்துகள்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா.?

 கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். 

Coimbatore cylinder blast.. Mubeen Jamats refused to bury the body
Author
First Published Oct 25, 2022, 2:59 PM IST

கோவையில் கார் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த முபீனின் உடலை அடக்க செய்ய அனைத்து ஜாமத்துகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.  
 
கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சம்பவ இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில்  6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க;- தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்

Coimbatore cylinder blast.. Mubeen Jamats refused to bury the body

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. மேலும், அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக கோவை பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Coimbatore cylinder blast.. Mubeen Jamats refused to bury the body

இந்நிலையில் ஜமேசா முபீன் உடல் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனைவியிடம்  ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடலை அடக்கம் செய்ய ஜமாத்துகள் முன்வரவில்லை. கோவையின் அனைத்து ஜமாத்துகளும் அமைதியை விரும்புவதால், சமூக விரோத செயலுக்கு திட்டுமிட்டது போல் முபீனின் மரணம் இருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பூ மார்கெட் ஜமாத்தில் மனிதாபிமான அடிப்படையில் முபீனின் உடலை அடக்கம் செய்தனர். 

இதையும் படிங்க;-  கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள்.. 5 பேர் அதிரடி கைது..!

Follow Us:
Download App:
  • android
  • ios