போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்… கோவை மாநகராட்சி எச்சரிக்கை!!

கோவையில் போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

coimbatore corporation warns that fine for owners of cows that obstruct traffic

கோவையில் போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு வந்த ஹாக்கி தொடருக்கான உலகக்கோப்பை - முதல்வர் வாழ்த்து

இதை தவிர்க்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் 10,000 ரூபாய் அபராதம் செலுத்தி மாட்டை பிடித்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: வறுமையின் உச்சம்: 5 மாத பெண்குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும். மேலும், மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் கற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios