Asianet News TamilAsianet News Tamil

சென்னைக்கு வந்த ஹாக்கி தொடருக்கான உலகக்கோப்பை - முதல்வர் வாழ்த்து

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர் ஏற்படுத்தவும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறவும் உலகக் கோப்பையானது இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.
 

Hockey world cup trophy is arrived chennai for awareness
Author
First Published Dec 21, 2022, 6:25 PM IST

2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி 29ம் தேதி வரை இந்தியாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. அதன்படி மக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்-ரூர்கேலாவில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் (2023 Men's FIH Hockey World Cup) கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.  

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயணம் மேற்கொள்ளும் ஹாக்கி உலகக் கோப்பை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தது.  இந்த ஹாக்கி உலகக் கோப்பைக்கு  சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 

உதயநிதி எனக்கு துணையாக இருக்கிறார் எனக்கு எந்த சிரமமும் இல்லை - அமைச்சர் சாமிநாதன்

ஹாக்கி உலகக்கோப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் பிரபலப்படுத்தும் வகையில், உலகக்கோப்பை தமிழ்நாடு முதலமைச்சரிடம் இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து, உலகக்கோப்பையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் வழங்கினார். 

இக்கோப்பையானது, தமிழ்நாட்டின் முன்னணி ஹாக்கி வீரர்கள்  உள்ளிட்டோரால் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்திற்கு கொண்டுவரப்படும்.  அங்கு, பாரம்பரிய முறையில் மேள தாளங்கள் முழங்க கோப்பைக்கும் வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.  

நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு

பின்னர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மற்றும் காவல்துறை அணிகளிடையே சிறப்பு கண்காட்சி போட்டி நடைபெறவுள்ளது. கண்கவர் கலைநிகழ்சிகளும் நடைபெறவுள்ளன. அதனையடுத்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், ஹாக்கி உலகக் கோப்பையை கேரளா ஹாக்கி நிர்வாகிகளிடம் வழங்குவார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடடெங்கும் அடுத்த 15 நாட்களில் 100 பள்ளிகளில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகளை இந்திய ஹாக்கி அமைப்பு, தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தவுள்ளது. 


Follow Us:
Download App:
  • android
  • ios