நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள், முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டும் வகையில் முதல்வரால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு முதல் நாளிலேயே ரூ.50 கோடி வசூலானதைத் தொடர்ந்து கல்வியாளர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் கிளாஸ், ஸ்பெசல் கிளாஸ் என்ற பெயர்களில் தனியார் பள்ளிகள் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையை மாற்றும் வகையில் அரசு சார்பில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
அதன்படி கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அரசு விழாவில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடம் நிதி வசூலிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி வசூலிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், கொடையாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் வெளிப்படைத் தன்மையுடன் செலவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை இத்திட்டத்திற்கு வழங்கினார்.
பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
முதல்வருக்கு அடுத்தபடியாக பல்வேறு தன்னார்வலர்கள், பெரு நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளித்தன. அதன்படி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.50 கோடி வசூலான நிலையில், பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், உள்ளிட்ட கல்வியாளர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனது.
இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புவோர் https://nammaschool.tnschools.gov.in/#/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று நிதியுதவி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.