அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளை மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நடிகர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக “நம்ம ஸ்கூல்” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொருவரின் வாழ்விலும் வசந்தகாலம் என்றால் அது பள்ளி பருவம் தான்.
மேடையில் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ; நிர்வாகிகள் அதிர்ச்சி
அனைத்தையும் அரசு மட்டுமே செய்துவிட முடியாது. மக்களும் உதவ வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாங்கள் படித்த பள்ளிக்கு செய்யும் நன்றி கடனாக முன்னாள் மாணவர்கள் உதவலாம். அதே போன்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நடிகர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து இத்திட்டத்திற்காக ரூ.5 லட்சம் தருவதாக அறிவித்துள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அதே போன்று தொழில் முனைவோர், தொழிலதிபர் என பல்வேறு நிலைகளில் உள்ளனர். இவர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வண்ணம் பூசுதல், இணைதள வசதிகள், சுகாதாரமான கழிவறை, ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக பிரத்தியேகமாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தில் பங்கெடுக்க விரும்புபவர்கள் எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி செய்யலாம். தாங்கள் செலுத்திய நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.