கோவை கூட்டுறவு வார விழா! - மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை - ஐ பெரியசாமி!

கோவையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் செந்தில் பாலாஜி தலைமையில் விழா நடைபெற்றது.
 

Coimbatore cooperative Week Festival! - Priority in lending to Women Self Help Groups - minister Periyaswamy!

கோவை மாவட்டம், கொடிசியாவில் நடைபெற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மேயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021-ம் ஆண்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கூட்டுடுறவுத்துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர் பெரியசாமி, முன்பு இருந்த கூட்டுறவு நிலையை மாற்றி தலைநிமிர்ந்து நிற்க கூடிய துறையாக உருவாக்கி இருக்கிறார் என்றார். மேலும், கோவை மாவடத்தில் மகளிர் சுய உதவி குழுக்கு ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட் ஆட்சியர் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மிக அதிகமாக கடன் அளிக்க இருக்கின்றோம் என்றார். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரயும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட இருப்பதாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை மிக சிறப்பாக செயல்படுவதகா கூறினார். கல்வித்துறைக்கும் கூட்டுறவு துறை மூலம் நிறைய செய்து இருக்கின்றோம் என்றார். கொரோனா காலத்தில் 4000 ரூபாய் வீதம் 99.9 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டுறவுத்துறையில், 10 ஆண்டுகளில். இல்லாத அளவுக்கு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios