கோவை கார் சிலிண்டர் வெடிப்பு.. ஆக்‌ஷனில் இறங்கிய NIA.. தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை..!

கோவை மாவட்டம் உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த 23ஆம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த  ஜமேசா முபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

Coimbatore car cylinder explosion..NIA raids at 45 places across Tamil Nadu

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த 23ஆம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த  ஜமேசா முபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜமேசா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடி பொருட்களுக்கு தேவையான வேதி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- கோவை கார் வெடி விபத்து..! சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு..! கோயிலில் விசாரணை

Coimbatore car cylinder explosion..NIA raids at 45 places across Tamil Nadu

மேலும் இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! நெல்லையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை

Coimbatore car cylinder explosion..NIA raids at 45 places across Tamil Nadu

இந்நிலையில், தமிழகம் முழுவதும்  45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி, கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது. கோட்டைமேடு பகுதியில் சனோபர் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் சோதனை நடைபெற்று வருவததால் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;-  மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios