Asianet News TamilAsianet News Tamil

மாற்றி அமைக்கப்படும் டிடி பொதிகை சேனல்; இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

ராமர்கோவில் விவகாரத்தில் திமுகவினர் பேசும் கருத்துகள் அவர்கள் எவ்வளவு பிற்போக்குத்தனத்துடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.

central minister l murugan slams dmk government in coimbatore vel
Author
First Published Jan 18, 2024, 7:33 PM IST

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது என தெரிவித்தார். 

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  நாளைய தினம் ஒரு முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய சேனலாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். 

சாமி கும்பிடாமல் யாரும் காளையை அவிழ்ப்பதில்லை; ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி - வானதி சீனிவாசன் விளக்கம்

திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை அயோத்தி ராமர் கோவில் விவகாரம் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு, எண்ணம், தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய பிரஜையும், பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். இதில் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள்.

வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைப்பதா? கருணாநிதி குடும்பத்திற்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்

நாளை பிரதமர் வருகிறார், தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். மேலும் கோவையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டுள்ளது குறித்தான கேள்விக்கு அதைப்பற்றி பிறகு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios