Capgemini investment in Coimbatore: 

கேப்ஜெமினி டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ரூ.75 கோடி முதலீடு செய்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோவை விளாங்குறிச்சியில் உள்ள எல்காட் SEZ அலுவலகத்தில் 1,621 ஐடி/ஐடிஇஎஸ் சேவை பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

MEPZ SEZ இன் வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையிலான யூனிட் அப்ரூவல் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் கமிட்டி திங்கட்கிழமை 16 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் விளைவாக ரூ.138 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 2,110 வேலைகள் உருவாக்கப்பட உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி ஏப்ரல் 2024 முதல், MEPZ SEZ ரூ.4,546 கோடி முதலீடுகளைச் செய்துள்ளது. தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி பிராந்தியங்களில் உள்ள SEZகள் மற்றும் EOUகளில் 32,726 வேலைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற MEPZ SEZ கமிட்டியில் வழங்கப்பட்ட ஒப்புதல்கள் பிராந்திய பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளாவிய வர்த்தக போட்டித்தன்மை ஆகியவற்றில் SEZ இன் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.