Asianet News TamilAsianet News Tamil

என் கடையையை சூறையாடிவிட்டு கொலை மிரட்டல் விடுகிறார் பாஜகவின் அண்ணாமலை! - நடவடிக்கை கோரி புகார்!

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த அண்ணாதுரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் தன்னை சிலர் மிரட்டுவதாக கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
 

BJPs Annamalai looted my shop and threatened to kill me! - Complain to Coimbatore Police Commissioner's Office for action!
Author
First Published May 25, 2023, 3:36 PM IST

கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதி சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். இவர் பழைய சோறு டாட் காம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் வழங்கி வரும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தன்னை தொழில் செய்யாவிடாமல் தடுப்பதாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அவர் அளித்த மனுவில், சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவரின் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் எனது பணிகளுக்காக கட்டடத்தை வாங்கினேன். எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.‌ கட்டடத்தை சீரமைக்க நான் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன். இதற்கிடையே பழனிச்சாமியின் மகள் பிருந்தா என்பவர் வாடகை கட்டடத்தில் இருக்கும் எனது கடை மற்றும் அலுவலகத்திற்கு வந்து அடிக்கடி தொந்தரவு செய்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தடுத்தல் மின் இணைப்பை துண்டித்தல் போன்ற செயல்பாடுகளை அவர் செய்து வந்தார். அவர் நடவடிக்கையால் எனக்கு 15 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஆகிவிட்டது.

தொடர்ந்து, பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி மாவட்ட பொது செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் எனது அலுவலகத்திற்கு வந்து பொருட்களை சூறையாடிவிட்டனர். சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டார்கள். இது தொடர்பாக நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார்கள்.‌

எனது கடை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை . நான் பயன்படுத்திய அலுவலகத்தை பாரதிய ஜனதா சேவா மையமாக மாற்ற திட்டமிட்டு அவர்கள் இது போன்ற செயல்களை செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஏதாவது இருந்தாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள் என என்னை மிரட்டி வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை, உத்தம ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் வெளிப்படையாக புகார் அளித்திருப்பதால் அவர்கள் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்பார்கள். போலீசார் உரிய முறையில் இதனை விசாரிக்க வேண்டும் என அண்ணாதுரை கேட்டு கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios