Asianet News TamilAsianet News Tamil

Election 2024: பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத பாஜக கோவை தொகுதியில் எப்படி வெற்றி பெறும்? வேலுமணி கேள்வி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய்யான கருத்து கணிப்பை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.

bjp candidate annamalai creates a fake exit poll agenda on coimbatore constituency said former minister sp velumani vel
Author
First Published Apr 15, 2024, 4:21 PM IST

கோவை பந்தயசாலை பகுதியில் சிஎஸ்ஐ மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தரை சந்தித்த  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சுமார் அரை மணி நேர சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. 

அதிமுக தான் கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது என்பது மக்களுக்கு தெரியும். கோவை பந்தய சாலையில் உள்ள நடை பயிற்சிக்கான நடைபாதை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளை அமைத்து தந்து 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு அதிமுக கொடுத்தது. திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும், கோவைக்காக எதுவும் செய்யவில்லை. 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூருக்கு பெரும் பின்னடைவு - கமல்ஹாசன்

தற்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை 500 நாட்களில் 100 திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்துள்ளார். விவரம் தெரிந்த மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போது கோவையில் சர்வதேச விமான நிலையம் அமைப்போம் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது முதன்மை செயலாளரை நேரடியாக அழைத்து வந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிதி ஒதுக்கி நில எடுப்பு செய்து கொடுத்தோம். ஆனால் அப்போது மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். 

திமுகவிற்கும், அண்ணா திமுகவிற்கும் தான் போட்டி என்றுள்ள சூழலில்  திமுக இப்போது களத்தில் இல்லை. அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சி மீடியா மூலமும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று வதந்தி பரப்பி வருகிறது. அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாகவும் பரப்புகிறார்கள். மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும்.

இன்றைய தினம் அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாக அவர்களே தயார் செய்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பாஜகவின் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும், இரண்டாவது இடத்தில் 33% வாக்குகளை திமுக பெரும், அண்ணா திமுகவைச் சேர்ந்த சிங்கை இராமச்சந்திரன் 18.5% வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு செல்வார் என்றும் பாஜகவை ஃபோக்கஸ் செய்து மீடியாவில் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். 

அண்ணாமலையுடன் ஒப்பிட்டு ஆட்டுக்குட்டியை அசிங்கப்படுத்த வேண்டாம் - தொண்டர்கள் மத்தியில் சினேகன் பேச்சு

பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்தது அதிமுக தான். பாரதிய ஜனதா கட்சி முதலில் ஒவ்வொரு பூத்திற்கும் ஆள் போடட்டும். களத்தில் அதிமுக மட்டுமே உள்ளது. குறிப்பாக கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் பொழுது ஆனைமலை- நல்லாறு திட்டம் மீண்டும் உயிர்பிக்கப்படும். அண்ணாமலை மக்களை ஏமாற்றுவதை கண்டு ஒரு சிலர் நம்பலாம். 

அதிமுகவை அழிப்பேன், எடப்பாடியை அழிப்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் பொன்விழா கண்ட கட்சி அதிமுக. மேல்மட்டத்தில் இருக்கும் சில பேர் அண்ணாமலையை ஆதரிப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் கீழ்மட்ட தொண்டர்களும், நடுநிலையாளர்களும் அதிமுகவிற்கே ஆதரவளித்து வருகிறார்கள். இதே போல் அறையில் உட்கார்ந்து கொண்டு தனக்கு சாதகமாக கிரியேட் செய்வதை விடுத்து அண்ணாமலை களத்திற்கு வரவேண்டும் எனவும் இந்த கிரியேட் செய்வதை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் பாஜகவினர் எங்கு களத்தில் இருக்கிறார்கள் என்றும் எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios