சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் தான் சர்ச்சைக்கு காரணம்; கோவையில் பீகார் அதிகாரிகள் விளக்கம்
பீகார் மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விகளும், ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளும் தான் பிரச்சினைக்கு காரணம் என்று கோவையில் ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் விளக்கம்.
கோவையில் புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பீகார் மாநில உயர்மட்ட குழு அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பீகாரில் இருந்து வந்துள்ள சிறப்பு குழுவைச் சேர்ந்த பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், காவல் துறை ஐ.ஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை அலோப்குமார், எஸ்டிஎப் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின் போது பீகார் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுடன் பீகார் மாநில குழுவினர் நேரடியாக கலந்துரையாடினர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினருடன் பீகார் மாநில உயர்மட்ட குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இன்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து பீகார் மாநில தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்களது கருத்துக்களை நீண்ட நேரம் கேட்டறிந்தோம்.
அவர்கள் தெரிவித்த கருத்துகளை மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்து உள்ளோம். குறிப்பாக சில வீடியோக்கள் வைரலானது மூலமாக பொய் தகவல் பரவி, அதை பார்த்து அவர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. அந்த செய்தி போலியானது என்பதை விளக்கி இருக்கிறோம். தொழில் துறையினரிடமும் பேசியுள்ளோம், அவர்களுடைய கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வைரலான வீடியோக்களை பார்த்ததால் அவர்களிடம் பயம் இருந்தது.
இன்னமும் ஒரு சிலருக்கு பயம் உள்ளது. அந்த பயத்தை போக்க அவர்களிடம் பேசியுள்ளோம். வீடியோவில் உள்ளவர்கள் பீகாரிகள் கிடையாது என்பதை சொல்லி விளக்கி உள்ளோம். அவர்களுக்கு புரிந்து இருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்பினரும் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பீகார் மாநில சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டதில் இருந்தும், வீடியோ வைரலானதில் இருந்தும் தமிழகத்தில் வேலை செய்யக்கூடிய புலம் பெயர் தொழிலாளிகள் அச்சத்தில் இருந்தனர்.
கோவை ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்; ஹோலி பண்டிகைக்கு செல்ல சிறப்பு ரயில்
இதனால் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய பீகாரரிகள் ஊருக்கு செல்லக்கூடிய நிலை இருந்தது. இதனை மாற்ற தமிழக அரசும், பீகார் அரசும் முயற்சி மேற்கொண்டு இருக்கின்றது. வீடியோவில் வைரலானது தவறான செய்தி என்பதை பீகார் அரசும், அங்கு இருக்கக்கூடிய ஊடகங்களும் பீகாரில் வீட்டில் இருக்கும் தொழிலாளர் குடும்பத்தினரை தைரியப்படுத்துங்கள் என சொல்லி இருப்பதாக தெரிவித்துள்ளார்.