Bheem e-Bike | மேக் இன் இந்தியா மூலம் ''பீம் இ-பைக்'' அறிமுகம்! ஒருமுறை சார்ஜில் 535கி.மீ., பயணிக்கலாம்!
நாட்டிலேயே முதன் முதலாக உள்நாட்டு தயாரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பீம் இ-பை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த 10kwh பேட்டரி பயன்படுத்தப்படும் இந்த வாகனத்தில் ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
நாட்டிலேயே முதன் முதலாக உள்நாட்டு தயாரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பீம் இ-பை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த 10kwh பேட்டரி பயன்படுத்தப்படும் இந்த வாகனத்தில் ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பரதன் ஒசோடெக்ஸ் எனும் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
விவசயம், குறுந்தொழில், உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.
கோவையில் நடைபெற்ற எலக்டிரிக் இருசக்கர வாகனம் அறிமுக விழாவில் இலவச உணவு வழங்கும் தன்னார்வ அமைப்பினரான மாற்றுத்திறனாளிக்கு முதல் இலவச வாகனம் வழங்கப்பட்டது.
புதிய வாகனம் குறித்து பரதன் கூறுகையில், சக்தி வாய்ந்த 10kwh பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 525 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றார். நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓலா, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் TVS iQube - விலை எவ்வளவு தெரியுமா?
புளுடூத், ஜி.பி.எஸ். உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.