Asianet News TamilAsianet News Tamil

பேராபத்தை நோக்கி கோவை; பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஒற்றை கோரிக்கை

தண்ணீர் தட்டுப்பாட்டால் கோவைக்கு வரவிருக்கும் பேராபத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

As there is a shortage of water in Coimbatore, the people of the area have demanded that the water bodies be drained vel
Author
First Published Mar 25, 2024, 11:17 AM IST

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிகள், வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதைத் தொடர்ந்து கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

ஆன்மிகமும், அரசியலும் பிரிக்கக் கூடாதவை; மருதாச்சல அடிகளாரிடம் ஆசிபெற்ற பின் அண்ணாமலை பேட்டி

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போதே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மக்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒற்றை கோரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி, கோவைக்கு தண்ணீர் வழங்கி வரும் பில்லூர் அணை ஏறக்குறைய 38 வருடங்களுக்கு பிறகு கடும் வறட்சியை சந்தித்துள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பில்லூர் அணையை தூர்வார மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் தற்போது முயல வேண்டும். இதன்மூலம் மழைக் காலங்களில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்க இயலும். 

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு.. தொடர்ந்து கள்ளமௌனம் காக்கும் திமுக - விளாசும் பாஜக தலைவர் அண்ணாமலை!

மேலும் சின்னவேடம்பட்டி ஏரியை குடிநீர் தேக்க ஏரியாக அறிவித்து கோவை பகுதிக்கான குடிநீர் தேக்கத்தை இந்த சின்னவேடம்பட்டி ஏரியில் தேக்கி வைக்க ஆவண செய்ய வேண்டும். இந்த ஏரி கழிவு நீர் கலக்காத எரியாக தற்போது வரை உள்ளது. எனவே மழைக்காலங்களில் சின்னவேடம்பட்டி ஏரியில்  பவானி ஆறு  நீரை தேக்கி வைக்க ஆவண செய்ய வேண்டும் என்று தங்களது கோரிக்கையை வாய்மொழியாக தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios