வள்ளி கும்மி நடனம்: அண்ணாமலை பாராட்டு!

பாரம்பரிய வள்ளி கும்மி நடனம், கொங்கு  பகுதியை உலகத்தில் மைய அடையாள புள்ளியாக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Annamalai greets Valli Kummi dance has made Kongu region a focal point of identity in the world smp

கோவை மாவட்டம் அன்னூர் வடக்கலூர் பகுதியில் ஜ.சி.எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கால்பந்து, கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தல் ஆணையர் ராஜினாமா: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்!

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முருகன் வள்ளி கும்மி குழுவினரின் திருக்குறள் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருக்குறளை பாடலாக மாற்றி வள்ளி கும்மி நடன இசை பாடலாக பாடி வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “பிரதமர் நடத்திய காசி தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. அதன் பின்னர் அயோத்தியில் வள்ளி கும்மி நடந்தது. இன்றைக்கு இந்தியா முழுவதும் வள்ளி கும்மி நாகரீக விளையாட்டாகவும் மாறி வருகிறது.” என்றார்.

வள்ளி கும்மி நடனம், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாகவும், இந்தியா முழுவதும்  பேசும் பொருளாக மாறி வரும் வள்ளி கும்மி நடனம், கொங்கு  பகுதியை உலகத்திற்கு அடையாளம் காட்டும் மைய  புள்ளியாக மாற்றியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios