Asianet News TamilAsianet News Tamil

கோவை நகைக்கடையில் ரூ.6.5 கோடி கையாடல்; ஊழியர் கைது

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அன்மோல் ஜூவல்லரியில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ தங்க நகை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் கடையின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

anmol jewellery shop manager anuman duvesi arrested in jewerrey laundering case
Author
First Published Oct 5, 2022, 6:12 PM IST

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 25 வருடமாக இயங்கி வருவது அன்மோல் ஜுவல்லரி. தமிழ்நாட்டில் பிரபலமாக இயங்கி வரும் நகைக்கடைகளுக்கு தங்க நகை ஆபரணங்கள் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்வது அல்மோன் ஜுவல்லரியின் தொழில். இந்த ஜுவல்லரியில் மார்கெட்டிங் மேனேஜராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. 

பெங்களூருவில் உள்ள மொத்த வியாபார நகைக்கடையான அன்மோல் ஜுவல்லரியிலிருந்து நகைகளை கோயம்புத்தூரில் இயங்குகின்ற நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வது இவரது பணி. பெங்களூருவில் தயாரிக்கப்படும் நகைகளை பத்திரமாக கொண்டு வந்து ஆர்டர்கள் பெறப்பட்ட நகை கடைகளில் ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பெங்களூருவுக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனை குறித்த பணிகளை மேற்கொள்வார். 

இந்த நிலையில் கடந்த 10-08-2022 முதல் 12-09-2022 வரை பெங்களூருவிலிருந்து நகைகள் கோயம்புத்தூருக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்திருக்கின்றார். நகைகளை ஆர்டர்கள் தந்த கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் இருந்திருக்கின்றார். இந்த நிலையில் அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை இன்னும் வரவில்லை என்பது தொடர்பாக கேட்டு இருக்கின்றார். 

நகைகளை கொண்டு வந்த அனுமன் தூவேசிடம் நகைகளின் விநியோகம் குறித்தும் விளக்கம் கேட்டிருக்கின்றார். ஆனால் நகைக்கடை உரிமையாளர் கேள்விக்கு அனுமன் துவேசி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அனுமான் ஜுவல்லரி கடை உரிமையாளர் காட்ரி நகையாடல் செய்ததனை உணர்ந்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் தர முடிவெடுத்தார். 

இந்த நிலையில் 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி மதிப்பிலான தங்கம் கையாடல் செய்ததாக வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். சிட்டி போலிஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து நகை கையாடல் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது. 

விசாரணையின் அடிப்படையில் நகைக்கடை ஊழியர் அனுமன் துவேசி தனிப்படை போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரை தேடி தனிப்படை போலிஸார் தீவிர புலன் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். நகை கையாடல் நடந்தது திட்டமிட்ட சதியா அல்லது எப்படி நடந்தது என்பது குறித்து அடித்தடுத்த விசாரணையில் தெரியவரும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios