அண்ணாமலையல்ல அந்த இமயமலையே வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி - பொள்ளாச்சி ஜெயராமன்

அண்ணாமலையல்ல அந்த இமயமலையே வந்தாலும் அதிமுகவின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

aiadmk will in 5 constituencies in kongu belt said former minister pollachi jayaraman in coimbatore vel

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “அண்ணாமலை மட்டுமல்ல அந்த இமயமலையே வந்தாலும், திருவண்ணாமலை அருளால் ராமச்சந்திரன் மாபெரும் வெற்றியை பெறுவார். அதிமுக வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்காது. ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெறுவார். ஊட்டியில் உலகத்தின் மிகப்பெரிய ஊழல் மன்னன், ஆணவம் பிடித்தவரை எதிர்த்து லோகேஷ் நிற்கிறார். கொங்கு மண்டலத்தின் 5 பிரதான தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக சொன்னவர் சுயேட்சையாக மாறிவிட்டார். தனது உயிர் போய் விடும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா, நம்மை எல்லாம் ஜெயிக்க வைத்தார். எம்ஜிஆர், அம்மா வழியில் இரட்டை இலையை எதிர்க்க எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாது. நேற்று நமது தொண்டன் இருந்த நிலை வேறு. இன்று நமது மானத்திற்கு சவால் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டால், வேலை செய்ய தொண்டர் படை தயார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைய, இந்த தேர்தலில் வெல்வது அதிமுகவாக இருக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்கள் வெல்வது உறுதி. அவர்கள் டெல்லிக்கு செல்வது உறுதி” எனத் தெரிவித்தார். 

TTV Dhinakaran: தேனி தொகுதியில் களம் காண்கிறார் டிடிவி தினகரன்; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

இதையடுத்து பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், “கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் திமுக மற்றும் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார். ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார். புரட்சி தலைவி வைத்த புரட்சி தலைவரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா? அண்ணாமலை கரூரில் நின்றால், டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து நிற்கிறார். ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ்அப்பில் வந்தது. அது உண்மையா‌ எனத் தெரியவில்லை.

நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு வெடியாக இருக்க வேண்டும் - கனிமொழி கர்ஜனை

நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேச தயார். அண்ணாமலை பயப்படுகிறார். என்னை பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அவருக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? நேரம், இடத்தை குறித்து வாருங்கள். விவாதிக்க நான் தயார். அதிமுக தொண்டர்களின் உணர்வை புண்படுத்திய அண்ணாமலை, வேலுமணி கோட்டையில் வந்து நின்றால் ஜெயிக்க விட்டு விடுவோமா?” எனத் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios