கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்பாட்டம்

கோவை மாநகராட்சியில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் முறைகேட்டில் ஈடுபட்ட துணைமேயர், கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
]

aiadmk councillor protest against mayor in coimbatore

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக துணைமேயர் வெற்றிசெல்வன், திமுக கவுண்சிலர்கள், அஸ்லம்பாஷா, கார்த்திகேயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக மேயர் கல்பனா  முறைகேட்டிற்கு துணைபோனதாககூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

மேலும் மாமன்ற கூட்டம் துவங்கியதும் இது குறித்து அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கேள்வி எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரம் திமுகமற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன் கடந்த வாரங்களில் திமுக மேயர் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்ததில் திமுக துணை மேயர்வெற்றிச்செல்வன், திமுக 100 வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், 99 வது வார்டு கவுன்சிலர் அஸ்லம்பாஷா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேயர் கல்பனாவிடம் காட்டமாக  தெரிவித்துள்ளனர். 

தமிழக விளையாட்டு வீரர்கள் உலகத்தோடு போட்டி போட வேண்டும் - முதல்வர் விருப்பம்

அந்த  வீடியோக்கள்  சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த சமவம் நடைபெற்று 20 நாட்களை கடந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் உடன்படிகையில் ஈடுபட்டு மேயரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்கள்.மேலும் இதனால் கோவை மாநகராட்சிக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. என்று தெரிவித்தனர். மேலும் கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்குள் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுவதாகவும், மக்களை பற்றிய அக்கறை திமுக கவுன்சிலர்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios