Asianet News TamilAsianet News Tamil

ஒற்றை காட்டு யானை உலா: கோவை அருகே பொதுமக்கள் அச்சம்!

கோவை பேரூர் அடுத்த வேடபட்டி செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை உலாவருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

A single wild elephant is roaming on the road leading to Coimbatore Vedapatti people fear smp
Author
First Published Mar 17, 2024, 11:42 AM IST

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஒற்றை காட்டு யானை உலா வரும் காட்சி சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஒற்றைக் காட்டு யானை அவருடைய தோட்டத்தில் வந்து அங்குள்ள மாங்காவை  சாப்பிட்டு விட்டு, பின்னர் மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. யானை வருவதற்கான சாத்தியக்கூறு இல்லாத இடத்தில் யானை உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு யானை வருவதற்கு சாத்தியக் கூறே இல்லை. ஆனாலும், அந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை தற்போது சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். யாணை நடமாட்டத்தால், தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பிரதமரின் ரோட் ஷோ நடைபெறும் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிப்பு; பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios