Asianet News TamilAsianet News Tamil

கோவையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி கோவை, மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

A government school headmaster committed suicide by jumping in front of a train near Tudiyalur railway station in Coimbatore district
Author
First Published Jul 9, 2023, 6:48 AM IST

கோவை மாவட்டம் வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் விஜயராணி(வயது 53).  இவர் வெள்ளக்கிணர் பகுதியில் குடியிருந்து வந்தார். இவருக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்ற நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரியல் நிலையம் அருகே வந்த அவர் இரு சக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரியல் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர் விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

பெண்களின் ஆயுதமே மௌனம் தான்; 2024 தேர்தலில் அது எதிரொலிக்கும் - திமுகவுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

தலைமை ஆசிரியை பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios