கோவை மாவட்டம் சிறுமுகையை அருகே இருக்கிறது பெத்திக்குட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி செல்வி (43). கூலி தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (வயது 6) என்கிற மகள் இருந்தார். அங்குள்ள பள்ளியில் சிறுமி 1-ம் வகுப்பு படித்து வந்தார். கூலி தொழிலாளியான முருகேசனும் அவரது மனைவியும் தங்களது ஒரே மகளை செல்லமாக வளர்த்து வந்தனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை சிகிச்சைக்காக பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சஞ்சனாவை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். பின் காவல்துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமி உயிரிழந்ததின் காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் தாத்தா.. உங்க உழைப்புக்கு நன்றி..! உருகிய உதயநிதி ஸ்டாலின்..!