இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 98 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் காலனமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு ஏராளமானோர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அன்பழகனின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!

Scroll to load tweet…

அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்' என சீமான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மறைத்த அன்பழகனின் உடல் இன்று மாலை 5 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட இருக்கிறது. இதனால் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கீழ்ப்பாக்கத்தில் அவரது இல்லம் முன்பாக திரண்டு வருகின்றனர்.

'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'..! அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..!