கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!
இறுதி வரையிலும் இணை பிரியாமல் வாழ்ந்த உயிர் தோழர்களின் இறப்பும் இயற்கையால் இணைந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 2020 மார்ச் 7ல் மரணமடைந்துள்ளார். இருவரும் 7ம் தேதி மரணமடைந்து இறப்பிலும் ஒன்றிணைந்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவலைக்கிடமாக இருந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.
பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!
43 ஆண்டுகாலமாக திமுகவின் பொதுச்செயலாளராக இருந்துவந்த அன்பழகன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உற்ற தோழனாக விளங்கி வந்தார். அரசியலில் கட்சிக்கும் ஆட்சிக்கும் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டபோதும் கருணாநிதியை விட்டு விலகாமல் இறுதி வரை அவருடன் இருந்தவர் அன்பழகன். ஒவ்வொருமுறை கட்சி பிளவுபட்டு முக்கிய தலைவர்கள் தனிக்கட்சி கண்டபோதும் அன்பழகன் கருணாநிதியுடன் உறுதியுடன் இருந்தார். அரசியலை கடந்தும் குடும்ப ரீதியாகவும் கருணாநிதியும் அன்பழகனும் இணக்கமாக இருந்தனர். கருணாநிதியின் குடும்ப விழாக்கள் அனைத்தும் அன்பழகன் தலைமையில் தான் நடக்கும். அதே போல அன்பழகனின் குடும்ப விழாக்கள் அனைத்தும் கருணாநிதியின் தலைமையில் தான் நடந்துள்ளன.
இவ்வாறு இறுதி வரையிலும் இணை பிரியாமல் வாழ்ந்த உயிர் தோழர்களின் இறப்பும் இயற்கையால் இணைந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 2020 மார்ச் 7ல் மரணமடைந்துள்ளார். இருவரும் 7ம் தேதி மரணமடைந்து இறப்பிலும் ஒன்றிணைந்துள்ளனர்.
'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'..! அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..!