Asianet News TamilAsianet News Tamil

சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளா? கேள்விக்குறியாகும் கோவை மக்கள் குடிநீர்!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவை மக்களுக்கு குடிநீர் பஞ்சம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
 

3 barrages across Siruvani river? The drinking water of the people of Coimbatore is questionable!
Author
First Published Apr 21, 2023, 12:16 PM IST | Last Updated Apr 21, 2023, 12:15 PM IST

கோவை மக்களுக்கு சிறுவாணி, பவானி, அத்திக்கடவு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி ஆறு உள்ளது.

தமிழக - கேரள எல்லையில் அமைந்து உள்ள இந்த அணையின் மொத்த நீர் தேக்கம் 50 அடி. இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரள அரசு வழங்க வேண்டும். ஆனால், பருவ மழை சமயத்தில், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்காது, கூடுதல் தண்ணீரை கேரள பொதுப் பணித் துறையினர் ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். தற்போது மழை இல்லாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெறும் 7 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக நேற்று, 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரளா அரசு - தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை

இதுபோன்ற சூழலில் பில்லுார் அணை கைகொடுத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், கேரள மாநிலம், அட்டப்பாடி வழியாக, பவானி ஆறாக பில்லுார் அணைக்கு திருப்பிவிடப்படுகிறது. இச்சூழலில், பவானிக்கு செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 3 தடுப்பணைகள் கட்டி வருவது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளமாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே குளிக்கடவு - சித்துார் வழித் தடத்தில் உள்ள நெல்லிப்பதி எனும் இடத்தில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தவிர, ஆற்றில் மேலும் இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டவும் கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. கேரள அரசின் நடவடிக்கைகளால், கோவை மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



எனவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நவடிக்கையை கண்டித்து, கோவையில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசு தாமதப்படுத்தாமல், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios