கோவை பேருந்து நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்; போலீசார் குவிப்பு

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்திய நிலையில் அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

25 shops demolished by corporation workers with the help of police officers in coimbatore who occupied public place in gandhipuram bus stand

கோவை காந்திபுரத்தில் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை இருந்து வந்தது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. 

புகாரின் அடிப்படையில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர் . இதனையொட்டி அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மதுபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ போக்சோ சட்டத்தில் கைது

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

டீ கப் ஆக்சிஜன் மாஸ்க்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு - அமைச்சர் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios