Coimbatore: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

25 kg worth jewellery theft from jos alukkas jewellery shop in coimbatore vel

கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வருகிறது. காந்திபுரம் பகுதி மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணியாளர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கடையை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவு பைக் பயணம்; தடுப்புச்சுவற்றில் மோதி கணவன், கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பலி

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், ஏசி வெண்டிலேட்டர் பகுதியில் துளையிட்டு மர்ம நபர் உள்ளே நுழைந்து கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. ஊழியர்கள் வழக்கம் போல் காலையில் கடையை திறந்து தங்களது பணியை செய்துள்ளனர். அப்போது ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட ஓரிரு நகைகள் மாயமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் மேலாளரிடம் முறையிட்டுள்ளனர். பெரும்பாலான பிரிவுகளில் இருந்து புகார் வந்ததை அடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி நபர் நள்ளிரவு 12 - 1 மணிக்குள் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துள்ளார். ஒரே இடத்தில் இருந்து நகைகள் திருடப்படாமல் பலவலாக பல பிரிவுகளில் இருந்து ஓரிரு நகைகள் திருடபட்டுள்ளதால் ஊழியர்களுக்கே சிறிது நேரம் கழித்து தான் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

 

கொள்ளை தொடர்பாக சில தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும் இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios