வடமாநிலங்களில் இருந்து ரயில்மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட 1800 டன் கோதுமை

வட மாநிலங்களில் இருந்து 1800 டன் கோதுமை ரயில் மூலம் கோவை வந்தடைந்தது வரும் நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்.

1800 tons wheat received from north states in coimbatore

மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுடைய தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பொருட்கள் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் கோதுமையும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்குவதற்காக வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் 1800 டன் கோதுமை கோவை வந்தடைந்தது.

கேட்டது காலிஃப்ளவர் தோசை, கிடைத்தது கரப்பான் பூச்சி தோசை - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்

ரயில் மூலம் கோவை வந்த கோதுமைகளை உணவு கழகத்தின் மூலம் லாரிகளின் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோதுமைகள் வரும் நாட்களில் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios