கோவையில் மாயமான சிறுவன்; 6 தனிப்படைகள் அமைத்து சிறுவனை நீலகிரியில் இருந்து மீட்ட காவல்துறை
கோவையில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுவனை மீட்க ஆறு தனிப்படைகள் மாநகர காவல் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நிலையில் சிறுவன் நீலகிரி மாவட்டத்தில் மீட்பு.
கோவை மசக்காளி பாளையம் அருகே உறவினர் வீட்டுக்கு தனது தாயுடன் விடுமுறையை கழிக்க வந்த 13 வயது சிறுவன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து மாயமானார். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயார் மகாலட்சுமி E1 சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மாநகர காவல் துறையின் சார்பில் ஆறு தனி படைகள் அமைக்கப்பட்டு சிறுவனின் புகைப்பட அடையாளங்களை வைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறையின் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற மாம்பழத் தேரோட்டம்
இந்த நிலையில் சிறுவன் இன்று நீலகிரி மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கோவையில் இருந்து நீலகிரி விரைந்துள்ளனர்.