13வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் டூ மாணவி தற்கொலை.. இது தான் காரணமா?
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாரணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அருகே ஹவுசிங் யூனிட் பகுதியில் 13வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வருபவர் மோகன்(47). மாநகராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தாரணி(17). இவர் அப்பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் பெற்று கொண்டு வீட்டுக்கு வந்த மாணவி 9 மணியளவில் 13வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதையும் படிங்க;- 20 நாட்களில் 4வது முறை.. தமிழகத்தில் ரவுடிகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுதான் காரணமா..!
இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாரணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க;- International Women’s Day 2023: இந்தியாவின் டாப் 2 தொழில் முனைவோர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?