பயணிகளே கவனத்திற்கு !! சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் குறைப்பு..
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை கோட்டத்திற்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணத்தை முன்பு இருந்தது போல் குறைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரும் பண்டிகை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்தனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.
மேலும் படிக்க:தமிழகம் வரும் பிரதமருடன் சந்திப்பா? ஓபிஎஸ் கூறிய பரபரப்பு தகவல்..!
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி,செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக இருந்த நிலையில் மேலும் ரூ.10 அதிகரித்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு அக்.1 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணைத்தை முன்பு இருந்தது போல் தற்போது குறைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நடைமேடை டிக்கெட் ரூ.20 யிலிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நேற்று முதல் இருந்து அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பி.இ., பி.டெக்., முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம்..? செமஸ்டர் தேர்வு தேதி..? அண்ணா பல்கலை. அறிவிப்பு