சென்னையின் முதல் ரயில் நிலையம் எது தெரியுமா ? கண்டிப்பா சென்ட்ரல் கிடையாது ? #சென்னைதினம்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது ஆகும். ஏனெனில் இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கிறது.
1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அதாவது, தற்போதைய தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக இருக்கிறது.
இதையும் படிங்க;- மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய கட்டங்களை கொண்டிருக்கிறது. இப்படி நீண்ட வரலாறு உடைய சென்னையை பற்றி நாம் அறியாதது பல இருக்கிறது. சென்னையின் முதல் ரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா ? சென்னை சென்ட்ரல் கிடையவே கிடையாது. அதற்கு பதில் ராயபுரம் தான்.
சென்னை ராயபுரத்தில் கி.பி. 1856-ஆம் ஆண்டு முதன்முதலில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை ஜூன் 28-ஆம் தேதி, அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமையிடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. அதன் பிறகுதான் சென்ட்ரல் ரயில் நிலையம் பார்க் டவுனில் கட்டப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த ரயில் நிலையம் ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிறகு மக்கள், ரயில் போக்குவரத்திற்காக அதனை நோக்கி நகர ஆரம்பித்தனர். ராயபுரம் ரயில் நிலையம் காலப்போக்கில் மெல்ல மெல்ல மக்கள் மனதில் இருந்து அகன்று விட்டது என்று தான் கூற வேண்டும். மேலும் 1799ம் ஆண்டு கடல்பணிகளை கவனிக்கும் அலுவலகங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கறுப்பர் நகரம் என்று சொல்லப்படும் வட சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
எனவே கடல் பணிகளை மேற்கொண்டிருந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டனர். வட சென்னையில் 720 கிரவுண்ட் நிலம் ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் தங்களுக்கென ஒரு கோவிலைக் கட்ட மக்கள் முடிவெடுத்து ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதிக்க 1825ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1829ஆம் ஆண்டு புனித ராயப்பர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. ராயப்பர் ஆலயத்தின் காரணமாகவே ராயபுரம் என்ற பெயர் வந்துள்ளது.
இதையும் படிங்க;- Madras Day : சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை! 350 ஆண்டுகால வரலாற்றை தாங்கிய முதல் கோட்டை!