அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார்கள்.  அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒன்றாக இணைந்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் OPS ஆதரவாளர் இல்ல காதணிவிழா ஒன்றில் நேரில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார்கள். அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதையும் படிங்க;- விடியலை நோக்கி ஆட்சி எனக் கூறிய திமுக..! ஒரு குடும்பத்திற்கு மட்டுமே விடியல் செல்கிறது - ஓபிஎஸ் ஆவேசம்

ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக அரசும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு: ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. 

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு: பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை பிரதமர் தமிழகம் வருவதற்கான தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக இல்லை. அப்படி வருவதாக இருந்தால் பிரதமரை சந்திப்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றார். 

இதையும் படிங்க;- நண்பன் எனக்கூறி அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் திமுக..! இருப்பதை பறிப்போம் என்பதுதான் திராவிட மாடலா- ஓபிஎஸ்