Asianet News TamilAsianet News Tamil

ரயில்களில் இனி ஈஸியாக போலாம் ..மக்களுக்கான குட் நியூஸ்..!

கோரோனா காலத்தில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அதிகரிக்கப்பட்ட நடைமேடை கட்டணம் சென்னை  ரயில்வே கோட்டத்துக்குட்ப்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய முறையில் குறைக்கப்பட்டு விலை ரூ.10 க்கு விற்பனை செய்யபடும் என தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இந்த கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

railway platform ticket
Author
Chennai, First Published Nov 25, 2021, 6:04 PM IST

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்தது. மேலும் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மீண்டும் பழைய கட்டணம் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  ரயில்வே அமைச்சகம் அளித்த விளக்கத்தில், சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மதுரை மக்களை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்து டிவிட்டர் பக்கத்தில், கோரோனா காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது என்றும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன்படி மீண்டும் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.  மேலும் நடைமேடை டிக்கேட் பெறுவதற்கு , அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் சென்னை கோட்டத்தை தொடர்ந்து மதுரை கோட்டத்திலும் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 10 ஆக குறைக்கப்படுவதாகவும், நடைமேடை டிக்கேட் கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios